
சவ் பவ்லோ, ஜூன் 16 – பிரேசிசில், சவ் பவ்லோவில் சுற்றுப் பயணிகள் ஏறிச் சென்ற உரிமம் பெறாத வெப்பக் காற்று பலூன் விழுந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 26 வயது பெண் ஒருவர் மரணம் அடைந்ததோடு இதர 10 பேர் காயம் அடைந்தனர். 35 பேர் ஏறிச் சென்ற அந்த பலூன் Ipero நகருக்கு அருகிலுள்ள Capela கிரமப்புற பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானதாக ராணுவ போலீஸ் அறிக்கையை மேற்கோள் காட்டி உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அந்த பலூனுக்கு பொழுதுபோக்கு அல்லது சுற்றுப் பயணிகளை ஏற்றிச் செல்வதற்கான உரிமம் இல்லை என்றும், சம்பவத்திற்குப் பிறகு சுற்றிப் பயணிகளை ஏற்றிச் சென்றவர் கைது செய்யப்பட்டார் என என்றும் தெரிவித்துள்ளது.
அந்த வெப்பக் காற்று பலூன் தங்கள் அமைப்பில் பதிவு செய்யப்படவில்லையென Boituva நகரத்தை தளமாகக் கொண்ட பிரேசிலிய பலூன் கூட்டமைப்பு தெரிவித்தது. அந்த சம்பவம் குறித்து மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.