Latestமலேசியா

வெளிநாட்டு வர்த்தகர்களை முடக்குவதற்காக 13 செயல் திட்டங்களை டி.பி.கே.எல் மேற்கொண்டது

கோலாலம்பூர், ஜூன்-19 – ஐ.நா அகதிகள் ஆணையத்தின் அட்டைகளை அடையாள ஆவணங்களாகப் பயன்படுத்தும் வெளிநாட்டினர் உட்பட, அப்பகுதியைச் சேர்ந்த வெளிநாட்டு வர்த்தகர்களுக்கு எதிராக கோலாலம்பூர் மாநகர் மன்றமான (DBKL)
13 பறிமுதல் மற்றும் இடமாற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.

ஜலான் செலாயாங் பாரு மற்றும் செலாயாங் தினசரி சந்தையைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெளிநாட்டினரால் நடத்தப்படும் வணிகங்கள் மீது மேற்கொள்ளப்பட்ட அமலாக்க நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.

பொதுப் பொருட்கள், மளிகைப் பொருட்கள், ஈரப்பதம் கொண்ட உணவுப் பொருட்கள், பழங்கள், காய்கறிகள் மற்றும் பிற பொருட்களை விற்பனை செய்யும் வணிக நடவடிக்கைகளில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டதாக முகநூல் அறிக்கை மூலம் DBKL தெரிவித்துள்ளது.

உரிமம் இன்றி வெளிநாட்டினரால் நடத்தப்பட்ட வணிகங்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில், நான்கு அபராத அறிவிப்புகளும் 13 சரக்குகள் பறிமுதல் மற்றும் இடமாற்ற நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டன.

அடையாள ஆவணங்களாக ஐ.நா வின் அகதி அட்டைகளைப் பயன்படுத்துபவர்களும் இதில் அடங்குவர். இந்த நடவடிக்கையின்போது பறிமுதல் செய்யப்பட்ட அனைத்துப் பொருட்களும் ,வணிக உபகரணங்களும், மேல் நடவடிக்கை மற்றும் ஆவணப்படுத்துதலுக்காக DBKL-இன் பறிமுதல் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டன.

அடையாளம் காணப்பட்ட முக்கியப் பகுதிகளில் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

அனுமதியற்ற வணிகங்கள் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருந்தால், பொதுமக்கள் தங்களைத் தொடர்புகொள்ளுமாறு அல்லது தகவல் வழங்குமாறு DBKL கேட்டுக்கொண்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!