Latestமலேசியா

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்குகிறது; கிளந்தானில் மட்டுமே 1 லட்சம் பேர்

கோலாலம்பூர், டிசம்பர்-1,நாட்டில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒன்றரை லட்சம் பேரை நெருங்கி வருகிறது.

இன்று காலை 7.30 மணி வரைக்குமான சமூக நலத் துறையின் பேரிடர் தகவல் மையத்தின் தகவலின் படி, நாடு மழுவதும் சுமார் 700 வெள்ள நிவாரண மையங்களில் 149,842 பேர் தங்கியுள்ளனர்.

அவர்கள் அனைவரும் 44,870 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

வெள்ளத்தில் ஆக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தானில் மட்டுமே எண்ணிக்கை 1 லட்சத்தை நெருங்குகிறது.

அங்கு 10 மாவட்டங்களில் சுமார் 30,000 குடும்பங்களைச் சேர்ந்த 96,059 பேர் வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

திரங்கானுவில் அனைத்து 8 மாவட்டங்களிலும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 42,000 பேரைத் தாண்டியுள்ளது.

கெடாவில் 2,440 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 8,000 பேர் 52 நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பஹாங், ஜோகூர், மலாக்கா ஆகிய மாநிலங்களில் முறையே 425 பேர், 591 பேர், 307 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனினும் பெர்லிஸ், நெகிரி செம்பிலான், சிலாங்கூர் ஆகிய மாநிலங்களில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கைக் குறைந்துள்ளது.

பெர்லிஸில் தற்போது 363 பேரும், நெகிரி செம்பிலானில் 1,925 பேரும் சிலாங்கூரில் 114 பேரும் மட்டுமே வெள்ள நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!