Latestமலேசியா

ஷக்காட் தொகையின் மூலம் நிலம் கொள்முதல் – விசாரணைக்காக 63 பேரை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எம்.ஏ.சி.சி அழைத்தது

கோலாலம்பூர், மார்ச் 2 – ஷக்காட் (Zakat ) பணத்தைப் பயன்படுத்தி நிலம் வாங்குவதற்கு அதிகார துஷ்பிரயோகம் செய்தது தொடர்பில்
விசாரணையை அதிகரிக்கவும், உதவவும் 63 தனிப்பட்ட நபர்களை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அழைத்துள்ளது.

பினாங்கு நில கொள்முதல் பரிவர்த்தனையில் மாநில அரசாங்கத்தின் மூத்த அதிகாரி ஒருவர் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாகவும், மீதமுள்ள வீட்டுக் கடனை செலுத்த Zakat நிதியை தவறாகப் பயன்படுத்தியதாகவும் 63 நபர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்ய Macc சம்மன் அனுப்பியுள்ளது.

வாக்குமூலங்களைப் பதிவு செய்ய அழைக்கப்பட்ட நபர்களில் மாநில இஸ்லாமிய சமய மன்ற உறுப்பினர்கள், முப்தி, மாநில செயலாளர், நிதி அதிகாரி, சட்ட ஆலோசகர், மாநில இஸ்லாமிய சமய மன்ற உறுப்பினர்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் அடங்குவர்.

மேலும் Zakat வாரிய உறுப்பினர்களையும், மாநில அதிகாரிகள் மற்றும் ஊழியர்களையும் பினாங்கு MACC அழைத்துள்ளது. இதனிடையே இது தொடர்பான விசாணையை பினாங்கு எம்.ஏ.சி.சியின் இயக்குநர் டத்தோ கருணாநிதி சுப்பையா உறுதிப்படுத்தியதோடு இந்த விவகாரம் 2009 ஆம் ஆண்டின் MACC சட்டத்தின் 23 ஆவது விதியின் கீழ் விசாரிக்கப்படுவதாகக் தெரிவித்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!