ஷா அலாம், அக் 16 – அண்மையில் சிலாங்கூர் ,ஷா அலாம் ஏரியில் விடப்பட்டது சியாம் வகை கெழுத்தி மீன் என மலேசிய மீன்பிடித்துறையின் தலைமை இயக்குனர் டத்தோ அட்னான் உசேய்ன் (Adnan Hussain) உறுதிப்படுத்தியுள்ளார். Pangasianodon Hypophthalmus என்ற அறிவியல் பெயரைக் கொண்ட அந்த மீன்வகைகள் உள்நாட்டில் பல்லுயிர் சுற்றுச்சூழலுக்கு மிரட்டலை ஏற்படுத்தக்கூடியது என்றும் அவர் தெரிவித்தார்.
சயாமிய கெழுத்தி மீன்வகைகள் இயற்கை சுற்றுச் சூழலை பாதிக்கும் என்பதோடு அவற்றை பொதுவான நீர் நிலைகளில் விட முடியாது என்றும் இன்று அட்னான் உசேய்ன் கூறினார். நீரில் விடப்பட்ட அந்த மீன்கள் தடை செய்யப்பட்ட அன்னிய மீன்கள் என்பதை நேற்று ஷா அலாம் மாநகர் மன்றம் ஒப்புக்கொள்ள மறுத்தது தொடர்பில் கருத்துரைத்தபோது அட்னான் உசேய்ன் இத்தகவலை வெளியிட்டார்.