
அலோர் ஸ்டார், பிப்ரவரி-3 – ஜனவரி 21-ஆம் தேதி கெடா, அலோர் ஸ்டாரில் ஒரு முதியவரையும் அவரது வளர்ப்பு மகனையும் தீ வைத்துக் கொலைச் செய்ததாக, 2 ஆடவர்கள் இன்று மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.
எனினும், 29 வயது Mohd Fitri Saiful Ridzuan Musa, 19 வயது Muhammad Haizan Abul Rahim இருவரின் வாக்குமூலம் பதிவுச் செய்யப்படவில்லை.
கொலைக் குற்றம் உயர் நீதிமன்ற அதிகாரத்தின் கீழ் வருவதே அதற்குக் காரணம்.
Kampung Tongkang Yard அருகே ஜாலான் கோத்தா தானாவில் உள்ள வீட்டில் ஜனவரி 21 அதிகாலை 3.30 மணிக்கு அக்குற்றத்தைப் புரிந்ததாக அவ்விரு ஆடவர்கள் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படலாம்.
Fitri-யின் 61 வயது மாமா Ibrahim Mydin, அவரின் வளர்ப்பு மகனான 23 வயது Muhammad Muslim Mohd Zaini இருவருமே கொலைச் செய்யப்பட்டவர்கள் ஆவர்.
அச்சம்பவம் முன்னதாக திடீர் மரணமாக வகைப்படுத்தப்பட்டிருந்தது;
எனினும், எரியக்கூடிய பொருட்களின் தடயங்கள் கண்டறியப்பட்ட பிறகு அது கொலையாக மாற்றப்பட்டது.