
தம்பின், ஏப்ரல்-15, நெகிரி செம்பிலான், கெமாஸ், ஜாலான் ஜெலாய் – பாசீர் பெசார் சாலை அருகே 60 மீட்டர் உயரத்தில் துணை மின்நிலையத்தின் மீது, தொலைத்தொடர்பு கோபுரத்தின் பராமரிப்புப் பணியாளர் நேற்று மாலை சுயநினைவற்ற நிலையில் கிடந்தார்.
பொது மக்கள் கொடுத்தத் தகவலை அடுத்து கெமாஸ் போலீஸ் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாக, தம்பின் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிடெண்டன் அமிருடின் சரிமான் கூறினார்.
தனது சகா கீழே இருக்க, துணை மின்நிலையத்தின் மீது அவர் தனியாளாக ஏறியதாக நம்பப்படுகிறது.
மேலே சென்றவர், தனக்குக் களைப்பாக இருப்பதோடு, கைகள் மரத்துப் போய், கீழே இறங்கும் தெம்பு இல்லையென, சகாவிடம் தெரிவித்தது விசாரணையில் கண்டறியப்பட்டதாக அமிருடின் சொன்னார்.
மேலே அவருக்கு முதலுதவிச் சிகிச்சைகள் வழங்கப்பட்டன; சுமார் 4 மணி நேரப் போராட்டங்களுக்குப் பிறகு அவரைக் கீறே இறக்கிக் கொண்டு வந்தாலும், அவர் உயிரிழந்து விட்டது உறுதிச் செய்யப்பட்டது.
அவரின் உடல் தம்பின் மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு சவப்பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.