
டாமான்சாரா – ஆகஸ்ட்-23 – டாமான்சாரா 1 Utama பேரங்காடி அதன் 30-ஆம் நிறைவாண்டைக் கொண்டாடும் இந்நிலையில், அங்குள்ள கார் நிறுத்துமிடத்தில் வாடிக்கையாளரான ஒரு பெண்ணுக்கு சுகப் பிரசவம் நடந்துள்ளது.
1 Utama நிர்வாகம் தனது சமூக ஊடகப் பக்கங்களில் அந்த மகிழ்ச்சி செய்தியை பகிர்ந்தது.
அந்தப் பெண் குழந்தைக்கு Amirah என பெயர் வைக்கப்பட்டுள்ளது தாயு சேயும் தற்போது மருத்துவமனையில் சீராக உள்ளனர்.
அவசரத்தின் போது பேரங்காடி பணியாளர்கள் ஓடி வந்து முதலுதவி வழங்கியதையும் பாராட்டி 1 Utama கௌரவித்துள்ளது.
இந்தச் செய்தியைப் பார்த்த வலைத்தளவாசிகள், அந்த ‘அதிர்ஷ்ட’ குழந்தைக்கு 1 Utama வாகன நிறுத்துமிடத்தில் வாழ்நாள் முழுவது இலவசமாக கார் நிறுத்தும் சலுகை வழங்கப்பட வேண்டுமெனக் கூறி வருகின்றனர்.