Latest

10 ஆண்டுகள் செல்லுபடியாகும் மலேசிய கடப்பிதழ் அறிமுகம்; கட்டணம் RM350

கோலாலம்பூர், ஜூன் 4 –மலேசிய அரசு 10 ஆண்டுகள் செல்லுபடியாக புதிய பாஸ்போர்ட் அதாவது கழப்பிதழை அறிமுகம் செய்துள்ளது. இதன் கட்டணம் RM350ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய கொள்கை அரசிதழில் வெளியிடப்பட்டு அமலுக்கு வந்துள்ளது. இதனால், முன்பு வழங்கப்பட்ட 5 ஆண்டுகள் செல்லுபடியாகும் பாஸ்போர்ட் முறைக்கு கூடுதலாக, 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் விருப்பமும் பொதுமக்களுக்கு கிடைக்கிறது.

முன்னதாக 5 ஆண்டு பாஸ்போர்ட் கட்டணம் RM200 ஆக இருந்தது. புதிய திட்டத்தின் கீழ், நீண்ட கால செல்லுபடியாகும் பாஸ்போர்ட் விருப்பம் வழங்கப்படுவதால், அடிக்கடி புதுப்பிக்க வேண்டிய அவசியம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அதேவேளை, சிறப்பு பிரிவினருக்கு சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளன. மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் (OKU) உள்ளிட்டோருக்கு குறைந்த கட்டணம் அல்லது இலவச வசதி வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் வெளிநாடு பயணம் செய்யும் மலேசியர்களுக்கு வசதியாக இருக்கும். அதேசமயம், புதிய பாஸ்போர்ட் நடைமுறைகள் மற்றும் விநியோக முறைகள் தொடர்பாக குடிநுழைவுத் துறை மேலதிக அறிவிப்புகளை வெளியிடும் என கூறப்படுகிறது.

இதனிடையே பொதுமக்கள் இந்த புதிய அறிவிப்பை வரவேற்று சமூக ஊடகங்களில் நல்ல கருத்துகளை பகிர்ந்து வருகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!