Latestஉலகம்

1,000 மீட்டர் ஆழத்தில் சுற்றுலா: சீனாவின் புதிய நீர்மூழ்கிக் கப்பல்

பெய்ஜிங், மார்ச்-23-கடலுக்கடியில் 1,000 மீட்டர் ஆழம் வரை பயணம் செய்யக்கூடிய உலகின் முதல் சுற்றுலா நீர்மூழ்கிக் கப்பலை சீனா உருவாக்கி வருகிறது.

இந்த கனவுத் திட்டத்தை சீனக் கப்பல் அறிவியல் ஆராய்ச்சி மையத்தின் பொறியியலாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நீர்மூழ்கிக் கப்பல் ஒரே நேரத்தில் 4 பேரை ஏற்றிச் செல்லக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

பயணிகள் ஆழ்கடலை நேரடியாக பார்வையிட ஏதுவாக, அதிக அழுத்தத்தையும் தாங்கக்கூடிய சிறப்பு கண்ணாடி ஜன்னல்கள் இதில் இடம்பெறவுள்ளன.

Prototype எனப்படும் இதன் மாதிரி வடிவம் இவ்வாண்டு இறுதிக்குள் தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எல்லாம் கைகூடி வந்தால், 2030-ஆம் ஆண்டு வாக்கில் வணிக பயன்பாட்டிற்கு இந்த நீர்மூழ்கிக் கப்பலைக் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது.

இம்முயற்சி, சொகுசான ஆழ்கடல் சுற்றுலாவில் புதிய வாய்ப்புகளைத் திறப்பதற்கான பெரும் முன்னேற்றமாக பார்க்கப்படுகிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!