
பாசீர் மாஸ், டிசம்பர்-2 – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் SPM தேர்வெழுதும் அனைத்து மாணவர்களையும் Op Payung திட்டத்தின் கீழ் மாற்றும் நடவடிக்கை நிறைவடைந்துள்ளது.
இதுவரை ஒருவரும் விடபடவில்லை என கல்வி அமைச்சர் ஃபாட்லீனா சிடேக் (Fadhlina Sidek) கூறினார்.
வெள்ளத்தில் மீட்கப்பட்ட அனைவரும் தற்போது தங்கும் விடுதிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்;
தேர்வுக்குத் தயாராக ஏதுவாக அவர்களுக்கு மீள்பார்வை புத்தகங்கள், இணையச் சேவை, கணினி வசதிகளும் செய்துத் தரப்பட்டுள்ளன.
வெள்ளத்தில் சிக்கியுள்ள SPM மாணவர்களை தங்கும் விடுதிகளுக்கும் தேர்வு மையங்களுக்கும் கொண்டுச் செல்ல, ஆயுதப் படையின் 3, 5, 7 டன் எடையிலான டிரக் வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாக, முன்நதாக துணைப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அஹ்மாட் சாஹிட் ஹமிடி அறிவித்திருந்தார்.
வெள்ளத்தில் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள கிளந்தான், திரங்கானு, கெடா போன்ற மாநிலங்களில் தேர்வெழுதும் மாணவர்கள் குறித்த நேரத்தில் தேர்வு மையங்களிலிருப்பதை உறுதிச் செய்ய அது அவசியமென்றார் அவர்.