
கோலாலம்பூர், ஜூலை-29- 13 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகக் கணக்குகளை வைத்திருப்பதை தடைச் செய்ய அராசாங்கம் பரிசீலித்து வருகிறது. தொடர்புத் துறை அமைச்சர் டத்தோ ஃபாஹ்மி ஃபாட்சில் மக்களவையில் அதனைத் தெரிவித்தார்.
இப்போது எங்குப் பார்த்தாலும் ஒரே டிக் டோக் மயம் தான்; 13 வயதுக்குக் கீழ்பட்ட சிறார்கள் கூட டிக் டோக் கணக்கு வைத்துள்ளார்கள்.
இது தவறென்பதை டிக் டோக் நிறுவனமே ஒப்புக் கொள்கிறது; எனவே 13 வயதுக்குட்பட்டவர்கள் சமூக ஊடகக் கணக்கு வைத்திருப்பதைத் தடைச் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுவதாக அவர் சொன்னார்.
அதே சமயம், 13 வயது மற்றும் அதற்கும் மேற்பட்டவர்களுக்கு, இந்த கால தகவல்களைப் புரிந்துகொள்வதற்கான டிஜிட்டல் கல்வியறிவு வழங்கப்பட வேண்டும் என்றார் அவர்.
இவ்வேளையில் குழந்தைகள் மற்றும் சிறார்களை உட்படுத்திய 1,443 ஆபாச உள்ளடக்கங்கள் நீக்கப்பட்டுள்ள தகவலையும் அவர் வெளியிட்டார்.
1998 தொடர்பு – பல்லூடகச் சட்டம் மற்றும் சேவை வழங்குநரின் சமூக வழிகாட்டி மீறலுக்காக அந்நடவடிக்கை எடுக்கப்பட்டது.