Latestமலேசியா

14 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்த முதியவர் ஜோகூர் பாருவில் போலீஸாரால் சுட்டுக் கொலை

ஜோகூர் பாரு, மார்ச்-8 – போதைப்பொருள் உட்பட பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில் 14 குற்றப்பதிவுகளைக் கொண்டிருந்த ஒரு முதியவர், ஜோகூர் பாருவில் போலீஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

தாமான் மோலேக்கில் இன்று அதிகாலை 3.10 மணியளவில் அச்சம்பவம் நிகழ்ந்தது.

Honda Vario மோட்டார் சைக்கிளில் சந்தேகத்திற்குரிய வகையில் சென்றுகொண்டிருந்த ஆடவரை, ரோந்து போலீசார் கண்டனர்.

பின்தொடர்ந்து சென்ற போலீஸ் அருகாமையில் உள்ள பகுதியில் மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தியது.

சோதனைக்காக, காரிலிருந்து போலீஸார் இறங்கி வரும் போது திடீரென அந்த மோட்டார் சைக்கிளோட்டி அவர்களை நோக்கி துப்பாகியால் சரமாரியாகச் சுட்டார்.

தற்காப்புக்காக போலீஸாரும் திருப்பிச் சுட, அம்முதியவர் அங்கேயே பலியானார்.

சம்பவ இடத்தில் Smith & Wesson இரக கைத்துப்பாக்கியும் உயிருள்ள 4 தோட்டாக்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக, ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ எம்.குமார் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!