Latestமலேசியா

16 ஆண்டுகளாக நீடிக்கும் இந்திரா காந்தியின் நீதித் தேடல்; பொறுமையிழக்கும் ஆதரவாளர்கள்

கோலாலம்பூர், அக்டோபர்-15,

எம். இந்திரா காந்தி கடத்தப்பட்ட தனது மகள் பிரசன்னா தீட்சாவை காண 16 ஆண்டுகளாக போராடி வருகிறார்; ஆனால் அவருக்கு இன்னும் நீதி கிடைக்காதது குறித்து அவரது ஆதரவு குழு கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

போலீஸும் மலேசிய மனித உரிமை ஆணையமுமான Suhakam-மும் தங்கள் கடமையை அலட்சியமாக கைவிட்டுள்ளதாக, இந்திரா காந்தி நடவடிக்கைக் குழு அல்து Indira Gandhi Action Team (INGAT) தலைவர் அருண் துரைசாமி குற்றம் சாட்டினார்.

“தாயுடன் மகளைச் சேர்த்து வைக்க 2018-ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கூட்டரசு நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றுவதில் எந்த முன்னேற்றமும் இல்லை”

2021 முதல் 2025 வரை, போலீசார் 18 affidavits உறுதிமொழிக் கடிதங்களை தாக்கல் செய்திருந்தாலும், அவை எல்லாம் ஒரே மாதிரியான ‘நகல் அறிக்கைகளே’…

எனவே, உண்மையான புலனாய்வு அல்லது துறைகள் இடையிலான ஒத்துழைப்பு எதுவும் நடக்கவில்லை என அருண் தெரிவித்தார்.

SUHAKAM ஆறு ஆண்டுகளுக்கு முன் சுயேட்சை விசாரணை நடத்துவதாக வாக்குறுதி அளித்தது; ஆனால், இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை என்பதும் ஏற்க முடியாதது என்றார் அவர்.

“ரேய்மண்ட் கோ மற்றும் அம்ரி செ மாட் வழக்குகளில் தைரியம் கட்டிய SUHAKAM, 16 ஆண்டுகளாக மகளைக் தேடும் ஒரு தாய்க்காக ஏன் மௌனமாக இருக்கிறது? என அருண் கேள்வி எழுப்பினார்.

ஆகவே, பொறுப்பை நிறைவேற்றத் தவறிய அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு அரசாங்கத்தையும், அமைப்பு முறையின் தோல்வியை ஆராயுமாறு மனித உரிமைக்கான நாடாளுமன்றத் தேர்வுக் குழுவையும் INGAT வலியுறுத்துவதாக அருண் சொன்னார்.

போலீஸ் மற்றும் அரசாங்கத்துக்கு எதிராக இந்திரா காந்தி தாக்கல் செய்த RM100 மில்லியன் இழப்பீடு வழக்கு இவ்வாண்டு தொடக்கத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்திரா காந்தியின் மதம் மாறிய முன்னாள் கணவரையோ அல்லது மகளையோ கண்டுபிடிப்பதில் போலீஸுக்கு ‘duty of care’ அதாவது கவனிப்புக் கடமை எதுவும் இல்லையென மேல்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

இது இன்னும் மலேசியாவின் நீண்டகால குழந்தை கடத்தல் வழக்குகளில் ஒன்றாக நீடிக்கிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!