Latestமலேசியா

169,000-க்கும் மேற்பட்ட SPM மாணவர்களுக்குப் பொது உயர்கல்வி கூடங்களில் அனுமதி

புத்ராஜெயா, மே-23-2025 SPM தேர்வை முடித்த மாணவர்களில் மொத்தம் 169, 803 பேருக்குப் பொது உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி பயில இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

​இவ்வாண்டு UPUOnline அகப்பக்கம் வாயிலாகப் பெறப்பட்ட 235,000-க்கும் மேற்பட்ட தகுதியான விண்ணப்பங்களில், 72.11 விழுக்காடு மாணவர்களுக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

​இதில் 91 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பொதுப் பல்கலைக்கழகங்களுக்கும், எஞ்சிய மாணவர்கள் பாலிடெக்னிக், சமூகக் கல்லூரிகள் மற்றும் MARA உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தேர்வுச் செய்யப்பட்டுள்ளனர்.

​முழுக்க முழுக்க தகுதி மதிப்பெண் அடிப்படையில் இந்த இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள வேளையில், மாற்றுத்திறனாளிகள், ஓராங் அஸ்லி மற்றும் B40 பிரிவினருக்கு சிறப்புப் பாதைகள் மூலமாக வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

​இம்முறை பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப் பெறாத மாணவர்கள், வரும் மே 31ஆம் தேதி மாலை 5 மணி வரை UPUOnline அகப்பக்கத்தின் வாயிலாக மேல்முறையீடு செய்யலாம் என அமைச்சு அறிவித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!