Latestமலேசியா

18 நாடுகள், 1 லட்சம் மரங்கள்; சுற்றுச்சூழல் இலக்குடன் உலகத்தை வலம் வரும் ஷாமி & ஜெயகுமாரன் மலேசியர்கள்

கோலாலாம்பூர், ஏப்ரல்-24-“குளிர்ந்த பூமிக்காகக் காற்றோட்டமான பயணம்” (Aircooled for a Cooler Planet) எனும் தாரக மந்திரத்துடன், உலகம் முழுவதும் ஒரு லட்சம் மரக்கன்றுகளை நடும் ஒரு உன்னதமான இலக்கை முன்னிறுத்தி ‘Trip 4 Trees’ எனும் மலேசிய குழு ஒன்று கடந்த பிப்ரவரி மாதம் தங்களது பயணத்தை தொடங்கியது.

இப்பயணத்தில் Muhammad Syahmi Bin Abdullah, மற்றும் எம்.ஜெயகுமாரன் ஆகிய இரு நண்பர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இவர்கள் 1960 மற்றும் 1967-ஆம் ஆண்டு மாடல் Volkswagen வாகனங்களில் மலேசியாவிலிருந்து லண்டன் வரை சுமார் 27,000 கிலோ மீட்டர் தூரத்தைத், தரை வழியாகக் கடப்பதே இவர்களது திட்டமாகும்.

தாய்லாந்து, சீனா, ரஷ்யா, துருக்கி உட்பட 18 நாடுகளின் வழியாக மொத்தம் 126 நாட்கள் என இப்பயணம் அமையவுள்ளது.

இதனிடையே தங்களது பயணத்தின் 12வது நாடாக தற்போது Austria Viennaவில் இருக்கும் இவர்கள், செல்லும் வழியெங்கும் மரக்கன்றுகளை விநியோகித்து, சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்துவதே தங்களின் முக்கிய நோக்கம் என வணக்கம் மலேசியாவிடம் கூறினார் Syahmi.

பயணத்தின் 54வது நாளில் இருக்கும் இப்பயணத்தில் இதுவரை தாங்கள் சந்தித்த சவால்களையும் இவ்வாறு பகிர்ந்துகொண்டார்.

இவ்வேளையில், இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தின் ஒரு பகுதியாக, வரும் ஏப்ரல் 26-ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமையன்று “மாபெரும் மரம் நடும் திட்டம்” நடைபெறவுள்ளது.

அன்று, யார் வேண்டுமென்றாலும்
எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் மரக் கன்றுகளை நட்டு, இந்த இயக்கத்தில் ஒது பகுதியாக இணைந்துக் கொள்ளாலாம் என்கிறார் ஜெயகுமாரன்.

Jeyakumaaran மற்றும் Syami ஆகியோரின் இந்த பயணம் சாதாரண ஒன்றல்ல…
வருங்கால தலைமுறைக்காக நம்மால் செய்யக்கூடிய ஒரு பொறுப்புணர்வு மிக்க ஒரு பயணமாகும்

“ஒரு மரம் நட்டால், ஒரு வாழ்க்கையை நட்டதற்கு சமம்” என்ற செய்தியை உலகம் முழுவதும் எடுத்துச் செல்லும் இந்த இரு நண்பர்களின் முயற்சி வெற்றிப்பெற வாழ்த்துவோம் வாருங்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!