Latestமலேசியா

புக்கிட் அமான் சிறப்புப் பிரிவுத் தலைவர் இப்ராஹிம் டாருஸ் இடைக்கால போலிஸ் துணைத் தலைவராக நியமனம்

கோலாலம்பூர், ஜூலை-27-புக்கிட் அமான் சிறப்புப் பிரிவுத் தலைவர் டத்தோ ஸ்ரீ Ibrahim Darus, தேசியப் போலீஸ் படையின் இடைக்கால துணைத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

​கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் போலீஸ் துறையில் சேவையாற்றி நேற்றோடு ஓய்வுப் பெற்றுள்ள தான் ஸ்ரீ ஆயோப் கான் மைடின் பிச்சையிடமிருந்து, Ibrahim இந்தத் தற்காலிகப் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

PULAPOL எனப்படும் போலீஸ் பயிற்சி மையத்தில் நடைபெற்ற இந்த அதிகாரப்பூர்வப் பொறுப்பு ஒப்படைப்பு விழாவை, IGP தான் ஸ்ரீ காலிட் இஸ்மாயில் நேரில் பார்வையிட்டார்.

​ஓய்வுபெற்றுள்ள ஆயோப் கான், பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவு, போதைப்பொருள் குற்றப் புலனாய்வுத் துறை மற்றும் குற்றப் புலனாய்வுத் துறை ஆகியவற்றில் பல முக்கிய தலைமைப் பொறுப்புகளை வகித்து, 2023 ஜூன் மாதம் போலீஸ் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!