Latestஉலகம்

2வது அனைத்துலக விமான நிலையம் திறப்பு; டெல்லி நெரிசலைக் குறைக்கும் புதிய முயற்சி

புது டெல்லி, மார்ச்-29-இந்தியத் தலைநகர் புது டெல்லிக்கு அருகில் இரண்டாவது அனைத்துலக விமான நிலையம் திறக்கப்பட்டுள்ளது.

டெல்லியிலிருந்து 75 கிலோ மீட்டர் தொலைவில் Noida International Airport எனப்படும் இப்புதிய விமான நிலையத்தை பிரதமர் நரேந்தி மோடி நேற்று அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்.

டெல்லியில் உள்ள தற்போதைய இந்திரா காந்தி அனைத்துலக விமான நிலையத்தின் நெரிசலைக் குறைக்கும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக, இந்த விமான நிலையம் ஆண்டுக்கு சுமார் 12 மில்லியன் பயணிகளுக்கு சேவையளிக்கும்.

இதுவே எதிர்காலத்தில், 70 மில்லியன் பயணிகள் வரை விரிவாக்கப்படும்.

இத்திட்டம், இந்தியாவில் அதிகரித்து வரும் விமானப் பயணத் தேவையை பூர்த்திச் செய்யும் முயற்சியின் ஒரு பகுதியாகும்.

இந்த விமான நிலையம் சரக்கு போக்குவரத்து மையமாகவும் செயல்பட்டு, வட இந்தியாவில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை ஊக்குவிக்கும் என, மோடி தமதுரையில் குறிப்பிட்டார்.

வர்த்தக விமானச் சேவைகள் இவ்வாண்டிற்குள் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது…

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!