Latestமலேசியா

2 முன்னாள் குவாந்தானாமோ கைதிகளை போலீஸ் தொடர்ந்து கண்காணிக்கும்; உள்துறை அமைச்சர் தகவல்

கோலாலம்பூர், டிசம்பர்-20,

குவாந்தானாமோ (Guantanamo) விரிகுடா தடுப்பு முகாமிலிருந்து தாயகம் திருப்பி அனுப்பப்பட்டுள்ள இரு மலேசியர்களின் நடமாட்டத்தையும் மற்றவர்களுடான தொடர்பையும் போலீஸ் தொடர்ந்து கண்காணித்து வரும்.

மாவட்ட அளவில் அது மேற்கொள்ளப்படுமென உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நாசூத்தியோன் இஸ்மாயில் (Datuk Seri Saifuddin Nasution Ismai) கூறினார்.

அவர்கள் மீண்டும் சமூகத்துடன் இணைவதற்கு ஏதுவாக, 3 கட்டங்களை உட்படுத்திய மறுவாழ்வுத் திட்டத்தை அரசாங்கம் செயல்படுத்தவுள்ளது.

ஒவ்வொரு கட்டமும் சமச்சீரான தனிநபர் மறுவாழ்வுக்கும் சமூக நல்லிணக்கத்துக்கும் முக்கியத்துவம் வழங்குமென அமைச்சர் சொன்னார்.

47 வயது Nazir Lep, 48 வயது Farik Amin இருவரும் 2002 பாலி குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்டதன் பேரில் குவாந்தானாமோ முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

2003-ஆம் ஆண்டு தாய்லாந்தில் கைதான இருவரும், 202 பேரை பலிகொண்ட பாலி குண்டு வெடிப்பின் சதிகாரன் ஹம்பாலிக்கு (Hambali) உடந்தையாக இருந்ததை ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து விசாரணைக்கு முந்தைய ஒப்பந்தத்தின் படி இருவருக்கும் கடந்த ஜனவரியில் 23 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவ்வொப்பந்தத்தின் படி, 5 ஆண்டுகளுக்குப் பிறகு அவர்களை விடுவித்து மூன்றாம் தரப்பு நாட்டுக்கு அனுப்ப முடியும்.

இந்நிலையில், தங்களின் எஞ்சிய சிறைத்தண்டனையை இங்கேயே தொடர அவர்கள் மலேசியாவிடமே திருப்பி ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!