கோலாலம்பூர், அக்டோபர் 9 – பிரதமரின் முன்னாள் ஆய்வியல் உதவியாளர் முஹம்மது யூசுப் ராவ்தர், 2 போலி கைத்துப்பாக்கிகள் வைத்திருந்ததாகத் தன் மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டை, இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மறுத்தார்.
கடந்த செப்டம்பர் 6ஆம் திகதி, ஜாலான் புக்கிட் கியாராவிலுள்ள, சனடா கியாரா (Sanada Kiara) அடுக்குமாடியில், இரண்டு போலி துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டத்தைத் தொடர்ந்து, யூசுப் ராவ்தர் கைது செய்யப்பட்டார்.
எனினும், இந்த குற்றச்சாட்டை மறுத்த நிலையில், இவ்வழக்கின் மறுசெவிமடுப்பை நீதிமன்றம் எதிர்வரும் நவம்பர் 12ஆம் திகதிக்கு நிர்ணயித்தது.
முன்னதாக, கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி 305 கிராம் போதைப்பொருளைக் கடத்தியதாக கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் முஹம்மது யூசுப் ராவ்தர், குற்றஞ்சாட்டப்பட்டார்.