
புத்ராஜெயா, ஏப்ரல்-1-2025 ருக்குன் தெத்தாங்கா சட்டத் திருத்தம் அல்லது சட்டம் 751 இன்று, ஏப்ரல் 1 முதல் அதிகாரப்பூர்வமாக அமுலுக்கு வந்துள்ளது.
இந்தச் சட்டத் திருத்தம் கடந்தாண்டு டிசம்பரில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேற்றப்பட்டது.
புதிய மாற்றங்களில், KRT செயற்குழு உறுப்பினர்களின் சேவைக் காலம் 3 ஆண்டுகள் வரை நீட்டிக்கப்பட்டிருப்பது முக்கியமானதாகும்.
அதோடு, சமூகத் தேவைகளுக்கு ஏற்ப ஆக்ககரமாக இருக்கும் வகையில், KRT-யின் அமைப்பு மற்றும் பணிகளை வலுப்படுத்துவதும் அதன் நோக்கமாகும்.
இச்சட்டத் திருத்தம், ருக்குன் தெங்கா தொண்டூழியப் படையின் பங்கு மற்றும் SRS எனப்படும் தன்னார்வ ரோந்து திட்டம் ஆகியவற்றை வலுப்படுத்தும் என்றும், சமூக ஒற்றுமை மற்றும் பாதுகாப்பை உறுதிச் செய்யும் என்றும், தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் நம்பிக்கைத் தெரிவித்தார்.
மக்கள் வாழும் சூழலை பாதுகாப்பான, ஒற்றுமையான, மற்றும் செழிப்பானதாக மாற்றும் முயற்சியில், மலேசியா மடானி இலக்கை இது பிரதிபலிப்பதாக அவர் சொன்னார்.



