
கோலாலம்பூர், ஏப்ரல்-5-2025 SPM தேர்வில் பிரிக்ஃபீல்ட்ஸ் ஸ்ரீ முருகன் நிலையத்தில் (SMC) படித்த மாணவர்களில் ஒருவர் கூட நன்னெறிப் பாடத்தில் A+ பெறவில்லை.
10 பாடங்களில் A+ பெற்றவர்கள் கூட நன்னெறிப் பாடத்தில் அந்த மிகச் சிறந்த அடைவு நிலையைப் பதிவுச் செய்யவில்லை.
இது உண்மையிலேயே தமக்கு ஆச்சரியத்தையும் அதிர்ச்சியையும் ஏற்டுத்துவதாக, SMC இயக்குநர் சுரேன் கந்தா வணக்கம் மலேசியாவிடம் கூறினார்.
10 பாடங்களில் A+ பெற்றிருந்தும் நன்னெறிப் பாடத்தில் A+ இல்லையென்றால் என்ன பிரச்னை என்பதையும் அவர் விளக்கினார்.
எனவே, யாருக்கெல்லாம் நன்னெறிப் பாடத்தில் A+ இல்லையோ, SMC-யை தொடர்புகொள்ளுமாறும், இவ்விவகாரம் குறித்து கல்வி அமைச்சுடன் பேசப்போவதாக சுரேன் சொன்னார்.
தேர்வில் வெற்றிப் பெற கடும் உழைப்பைப் போடும் மாணவர்களுக்கு, தூண்டுகோல் முக்கியம் என்பதால், இந்த நன்னெறிப் பாட விவகாரம் ஆராயப்பட வேண்டும் என்றார் அவர்.
2025 SPM தேர்வில் மிகச் சிறந்த தேர்ச்சிப் பெற்ற 15 மாணவர்களுக்கு இன்று காலை, பிரிக்ஃபீல்ட்ஸ் விவேகானந்தா தேசிய இடைநிலைப் பள்ளியில் நடைபெற்ற பாராட்டு நிகழ்வுக்குப் பிறகு சுரேன் இவ்வாறு பேசினார்.



