Latestமலேசியா

2026-இல் பிறக்கும் குழந்தைகள் 75.5 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது – மலேசிய புள்ளிவிவரத் துறை

கோலாலம்பூர், செப்-30-இவ்வாண்டில் பிறக்கும் குழந்தைகள் சராசரியாக 75.5 ஆண்டுகள் வரை வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதாக மலேசிய புள்ளிவிவரத் துறை (DOSM) தெரிவித்துள்ளது. பெண் குழந்தைகளின் ஆயுட்காலம் 78.1 ஆண்டுகளாகவும், ஆண் குழந்தைகளின் ஆயுட்காலம் 73.2 ஆண்டுகளாகவும் கணிக்கப்பட்டுள்ளது.

2024–2026 காலகட்டத்தில், பிறப்பின் போது அதிகபட்ச ஆயுட்காலம் சிலாங்கூரிலும், குறைந்த ஆயுட்காலம் திரங்கானுவிலும் பதிவாகியுள்ளது. இவ்வாண்டு 75.5 தேசிய சராசரி ஆயுட்காலமாக கணிக்கப்பட்டுள்ள நிலையில், அதை விடக் கூடுதலாக சிலாங்கூர் 78.2, கோலாலம்பூர் 77.3 மற்றும் லாபுவான் 77.0 ஆண்டுகள் என முன்னிலையில் உள்ளன.

2023-ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2026-ஆம் ஆண்டில் பிறப்பின் போது கணிக்கப்படும் ஆயுட்காலம் 1.5 ஆண்டுகள் அதிகரித்துள்ளது. 2020–2022 காலகட்டத்துடன் ஒப்பிடுகையில் 2023–2026 காலகட்டத்தில் இறப்புகள் குறைந்ததே அதற்குக் காரணம் என DOSM கூறியது. 2020-2022 காலகட்டத்தில் அதிகமானோர் கோவிட்-19 ஆல் மரணமடைந்தனர்.

இவ்வேளையில் இவ்வாண்டு 15 வயதை எட்டும் ஆண்கள் மேலும் 59 ஆண்டுகள் வாழ்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், அவர்களின் மொத்த ஆயுட்காலம் 74 ஆண்டுகளாக இருக்கும். அதே வயதுடைய பெண்களின் மொத்த ஆயுட்காலம் 78.7 ஆண்டுகளாக இருக்கும் என DOSM குறிப்பிட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!