Latestஉலகம்விளையாட்டு

2026 உலகக் கிண்ணம்: அதிகப்படியான டிக்கெட் விலைக்கு எதிராக FIFA மீது இரசிகர்கள் வழக்கு

லவ்சான் (சுவிட்சர்லாந்து), மார்ச்-25-2026 உலகக் கிண்ணக் கால்பந்து போட்டிக்கான டிக்கெட் விலைகள் மிக அதிகமாக இருப்பதாகக் கூறி, இரசிகர்கள் FIFA மீது வழக்கு தொடர்ந்துள்ளனர்.

ஐரோப்பியக் கால்பந்து இரசிகர்கள் சங்கமான FSE மற்றும் பயனீட்டாளர் அமைப்பான Euroconsumers, ஐரோப்பிய ஆணையத்தில் கூட்டாக அவ்வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.

அந்த அனைத்துலகக் கால்பந்து சம்மேளனம் பயன்படுத்தும் “Dynamic Pricing” அதாவது மாறும் விலை நிர்ணயம் காரணமாக, டிக்கெட் விலைகள் தேவைக்கேற்ப திடீரென உயர்ந்து வருகின்றன.

இதனால் சாதாரண இரசிகர்கள் டிக்கெட் வாங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

சில போட்டிகளுக்கான டிக்கெட் விலை நூற்றுக்கணக்கான டாலர்களை எட்டியுள்ளது.

இம்முறை ஆக மலிவான டிக்கெட் விலையே RM16,556-ரிலிருந்து தான் தொடங்குகிறது.

2022 கட்டார் உலகக் கிண்ணத்தில் விற்கப்பட்ட ஆக மலிவான டிக்கெட் விலையை விட இது 7 மடங்கு அதிகமாகும்.

அப்படியயே மலிவு விலை டிக்கெட்டுகள் இருந்தாலும், அவை மிகவும் குறைவாகவும் விரைவில் விற்று தீர்ந்து விடுவதாகவும் அதிருப்தி நிலவுகிறது.

“உலகக் கிண்ணம் எல்லோருக்குமானது, பணக்காரர்களுக்கு மட்டுமல்ல” என இரசிகர்கள் கூறுகின்றனர்.

டிக்கெட் விலையைக் குறைக்குமாறு, சில அரசியல்வாதிகளும் FIFA-வுக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

அழுத்தத்திற்கு அடிபணிந்து FIFA டிக்கெட் விலைகளைக் குறைக்குமா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்தும் இந்த 2026 உலகக் கிண்ணம், ஜூன் 11 தொடங்கி ஒரு மாதத்திற்கு நடைபெறுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!