Latestமலேசியா

2026 Seri Angkasa விருது: 1,601 முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன

கோலாலம்பூர், அக்-15-2026-ஆம் ஆண்டுக்கான Anugerah Seri Angkasa (ASA) விருதுகளுக்கு தொலைக்காட்சி, வானொலி மற்றும் புதிய ஊடகப் பிரிவுகளில் மொத்தம் 1,601 முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளன. “எல்லாம் இங்கேயே தொடங்குகிறது” (Everything Starts Here) என்ற கருப்பொருளில் நடைபெறும் இந்த 37-ஆவது விருது நிகழ்ச்சி, மலேசியாவின் ஒளிபரப்பு மற்றும் படைப்பாற்றல் துறையினரின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

 

விருதுகளுக்குத் தொலைக்காட்சிப் பிரிவில் 611, வானொலிப் பிரிவில் 421, புதிய ஊடகப் பிரிவில் 74 என மொத்தம் 1,106 முன்மொழிவுகள் பெறப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விருதுகளில் தொலைக்காட்சிக்கு 40 பிரிவுகளுக்கும், வானொலிக்கு 17 பிரிவுகளுக்கும், புதிய ஊடகத்துக்கு மூன்று பிரிவுகளுக்கும் போட்டியிடப்படுகிறது. அதோடு நடுவர் சிறப்பு விருது, Tokoh Seri Angkasa விருது ஆகியவையும் வழங்கப்படவுள்ளன.

இவ்விருதுகள் தயாரிப்பாளர்கள், திரைக்கதை எழுத்தாளர்கள், இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்கள், படத்தொகுப்பாளர்கள், தொழில்நுட்பக் குழுவினர் உள்ளிட்ட திரைக்குப் பின்னால் பணியாற்றுபவர்களின் பங்களிப்புகளையும் அங்கீகரிப்பதாக 2026 ASA விருதளிப்பு விழாவுக்கான countdown நிகழ்வில் உரையாற்றிய தொடர்புத்துறை அமைச்சின் பொதுச் செயலாளர் Datuk Abdul Halim Hamzah தெரிவித்தார். படைப்பாற்றல் என்பது தொழில்நுட்பத்தை மட்டுமன்றி, தனித்திறன், புதுமை, துணிச்சல், கடின உழைப்பு ஆகியவற்றின் ஒருங்கிணைப்பால் உருவாகிறது என்றும் அவர் கூறினார்.

மலேசியாவின் படைப்பாற்றல் துறை, சர்வதேசச் சந்தைகளில் போட்டியிடக்கூடிய உயர்தரமான உள்ளூர் படைப்புகளை உருவாக்க வேண்டும். மலேசியாவின் வளமான கலாச்சாரம், பன்முகத்தன்மை மற்றும் தனித்துவமான கதைகளை உலக அரங்கிற்குக் கொண்டுச் செல்ல படைப்பாளர்கள் முன்வர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். ASA விருதுகள் வெறும் அங்கீகார மேடையாக மட்டுமன்றி, புதிய முயற்சிகளையும் படைப்பாற்றலையும் ஊக்குவிக்கும் தளமாக விளங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ASA 2026 விருதுகளின் பிரம்மாண்டமான இறுதி நிகழ்வு அக்டோபர் 24-ஆம் தேதி புத்ராஜெயா அனைத்துலக மாநாட்டு மையத்தில் நடைபெறவுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!