Latestமலேசியா

2030ஆம் ஆண்டுக்குள் RM80 பில்லியன் ஹலால் ஏற்றுமதி இலக்கு – சாஹிட் ஹமிடி

கோலாலம்பூர், செப்-25-2030 ஆம் ஆண்டு வாக்கில் ஹலால் தொழில்துறை மூலம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 11 விழுக்காடு பங்களிப்பை பெறவும், ஹலால் ஏற்றுமதி மதிப்பை 80 பில்லியன் ரிங்கிட்டாக உயர்த்தவும் மலேசியா இலக்கு நிர்ணயித்துள்ளது.

உலகளாவிய ஹலால் சந்தையின் வளர்ச்சியைப் பயன்படுத்த அரசாங்க நிறுவனங்கள், மாநில அரசாங்கங்கள் மற்றும் தொழில்துறை அமைப்புகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என துணைப் பிரதமர் Datuk Seri Ahmad Zahid Hamidi வலியுறுத்தினார். 2030 ஆம் ஆண்டு வாக்கில் உலகளாவிய ஹலால் சந்தையின் தேவை US$3.3 டிரில்லியனை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

மலேசிய சர்வதேச வர்த்தக மற்றும் கண்காட்சி மையத்தில் (MITEC) நடைபெற்ற GHaS 2026 நிகழ்வைத் தொடக்கி வைத்து பேசிய அவர், MATRADE, MARA, JAKIM மற்றும் HDC ஆகியவை ஹலால் தொழிற்பேட்டைகளைக் கொண்ட மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

இதனிடையே, GHaS/MIHAS 2026 கண்காட்சியின் முதல் இரண்டு நாட்களில் 5.2 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான விற்பனை பதிவாகியுள்ளது. மேலும், MATRADE தரவுகளின்படி, 2025 ஆம் ஆண்டில் மலேசியாவின் ஹலால் ஏற்றுமதி 68.52 பில்லியன் ரிங்கிட்டை எட்டியதுடன், முந்தைய ஆண்டைக் காட்டிலும் 10.9 விழுக்காடு அதிகரித்துள்ளது.

மலேசியா-இந்தோனேசியா இடையிலான ஹலால் சான்றிதழ் பரஸ்பர அங்கீகார ஒப்பந்தம் குறித்தும் அந்நிகழ்வின் போது விளக்கப்பட்டது. இதன் மூலம் இரு நாடுகளிலும் அங்கீகரிக்கப்பட்ட ஹலால் சான்றிதழ்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டு, ஏற்றுமதி நடைமுறைகளை எளிதாக்கும் என தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!