
புத்ராஜெயா, செப்டம்பர் 25 – முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம். சரவணன் மற்றும் அவரது மனைவி, மூன்று பிள்ளைகளும் தங்களது சொத்து விவரங்களை அறிவிக்க மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC நோட்டீஸ் வழங்கவுள்ளது.
MACC தலைமை ஆணையர் டத்தோஸ்ரீ அப்துல் ஹலிம் அமான் (Datuk Seri Abd Halim Aman), ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த நோட்டீஸ் வழங்கப்படும் என்றார். சரவணன், அவரது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் வரும் திங்கட்கிழமை MACC தலைமையகத்திற்கு நேரில் வந்து நோட்டீஸைப் பெற்றுக்கொள்ளவுள்ளனர்.
இதனிடையே வெளிநாட்டில் கல்வி பயிலும் மற்றொரு பிள்ளைக்கு நவம்பர் மாதம் நோட்டீஸ் வழங்கப்படும். சரவணன், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 1.097 மில்லியன் ரிங்கிட் லஞ்சம் பெற்றதாக சுமத்தப்பட்ட மூன்று குற்றச்சாட்டுகளை கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.



