Latestமலேசியா

2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்காக மொராக்கோவில் நாய்கள் கொல்லப்படுகின்றன; விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டிக்காக மொராக்கோவில் நாய்கள் கொல்லப்படுகின்றன; விலங்கு நல ஆர்வலர்கள் குற்றச்சாட்டு

ரபாட், பிப்ரவரி-19,

2030 உலகக் கிண்ணக் கால்பந்துப் போட்டியின் இணை உபசரணை நாடு என்ற வகையில் அதற்கான தயார் நிலையின் ஒரு பகுதியாக மொராக்கோவில், தெருநாய்கள் விஷம் கொடுத்து, சுட்டு, உயிருடன் எரிக்கப்படுவதாக, விலங்கு நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நடவடிக்கைகள், சுற்றுலா பகுதிகளை சுத்தப்படுத்தும் முயற்சியாக மேற்கொள்ளப்படுவதாக அவர்கள் கூறுகின்றனர்.

புகைப்படங்கள் மற்றும் ஆதாரங்களை FIFA-க்கு அனுப்பி, உடனடி தலையீட்டையும் அவர்கள் கோரியுள்ளனர்.

இது உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், PETA போன்ற விலங்கு நல அமைப்புகள் மகஜர் அனுப்பி, மொராக்கோ அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகின்றன.

எனினும் இக்குற்றச்சாட்டுகளுக்கு மொராக்கோ அதிகாரிகள் இதுவரை விரிவான பதில் அளிக்கவில்லை.

ஆனால், சில உள்ளூர் பிரதிநிதிகள், தெருநாய்களை அகற்றுவது _“தெருவை சுத்தம் செய்யும்”_ நடவடிக்கையின் ஒரு பகுதியாகும் என ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆப்ரிக்க நாடான மொரோக்கோ, ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகியவற்றுடன் இணைந்து 2030 உலகக் கிண்ணக் கால்ந்துப் போட்டியை முதன் முறையாக நடத்துகிறது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!