Latestமலேசியா

23.95 மில்லியன் ரிங்கிட் டோட்டோ ஜாக்பாட்: வாகன ஓட்டுனரை மில்லியனராக மாற்றிய முக்கிய எண்கள்

கோலாலம்பூர், செப்-02- கோலாலம்பூரில், 66 வயதான தனிப்பட்ட வாகன ஓட்டுனர் ஒருவர் 23.95 மில்லியன் ரிங்கிட்டை வென்று பேரானந்தத்தில் திளைத்துள்ளார். கடந்த பத்தாண்டுகளாகத் தமது குடும்பத்தினருடன் தொடர்புடைய எண்களைப் பயன்படுத்தி விளையாடி வந்த நிலையில், அவருக்கு அந்த Supreme Toto 6/58 ஜாக்பாட் பரிசு கிடைத்துள்ளது. ஆகஸ்ட் 29 ஆம் தேதி நடைபெற்ற 6177/26 என்ற குலுக்கல் எண்ணின் கீழ் அந்த ஜாக்பாட் அடித்ததை STM Lottery Sdn Bhd நிறுவனம் உறுதிப்படுத்தியது.

Sports Totoவில் வழக்கமாக எண்கள் எடுத்து வரும் அவர், கடந்த ஆகஸ்ட் 29 ஆம் தேதி நெகிரி செம்பிலானில் உள்ள தனது மகளைச் சந்திக்கச் சென்றிருந்த போது அந்த வெற்றிச் சீட்டை வாங்கியுள்ளார். அவர் தேர்ந்தெடுத்த எண்களான 3, 5, 6, 10, 20 மற்றும் 42 ஆகியவை ஒவ்வொன்றும் முக்கியத்துவம் வாய்ந்தவை. எண் 3 அவரது குழந்தைகளையும், எண் 6 அவரது பேரக்குழந்தைகளையும் குறிப்பவை. எண்கள் 10 மற்றும் 20 ஆகியவை அவரது திருமண நாளான அக்டோபர் 20 ஆம் தேதியையும் எண் 42 அவரது திருமண வாழ்க்கையின் ஆண்டுகளையும் குறிப்பவை. ஆறாவது பேரக்குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, அவர் அண்மையில் தனது எண்களில் ஒன்றை ‘5’-லிருந்து ‘6’-ஆக மாற்றியிருந்தார்.

இரவு உணவு உண்டு கொண்டிருந்த போது அந்த எண்களைப் பார்த்ததும், உடனடியாக முடிவுகளைச் சரிபார்க்குமாறு தமது மகளிடம் கூறியதாக அவர் தெரிவித்தார். அவரது மகள் ‘டோட்டோ’ செயலி மூலம் சரிபார்த்து, அந்தச் சீட்டின் மதிப்பு 23,945,954.40 ரிங்கிட் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.

ஒருவேளை ‘ஜாக்பாட்’ வென்றால், அப்பணத்தைக் கொண்டு குடும்பத்தினர் அனைவரின் நிலுவையில் உள்ள கடன்களையும் அடைப்பதாகத் தமது தந்தை எப்போதும் கூறி வந்ததாக அம்முதியவரின் மகள் நெகிழ்ச்சியிடன் குறிப்பிட்டார்.

அவ்வாக்குறுதியைக் காப்பாற்றுவதோடு மீதமிருக்கும் பணத்தைத் தமது ஓய்வுக் காலத்திற்காகச் சேமித்து வைக்கப் போவதாக அம்முதியவர் தெரிவித்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!