Latestமலேசியா

25-வது மாடியிலிருந்து விழுந்து மியான்மர் கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெலுத்தோங், செப்டம்பர் 22 – ஜெலுத்தோங்கிலுள்ள அடுக்குமாடிக் குடியிருப்பு கட்டுமானத் தளத்திலிருந்து தவறி விழுந்து 31 வயதான மியான்மர் நாட்டைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

நேற்று மாலை சுமார் 6.50 மணியளவில் Lorong Perak பகுதியிலுள்ள கட்டுமானத் தளத்தில் இச்சம்பவம் நடந்தது. 25-வது மாடியில் பலகைகளைப் பொருத்தும் பணியில் ஈடுபட்டிருந்த அவர் தவறி விழுந்து, 20-வது மாடியில் கீழே விழுந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில் குற்றச்செயல் தொடர்பான எந்த அறிகுறியும் இல்லையென வடகிழக்கு மாவட்ட காவல்துறைத் தலைவர் தெரிவித்தார். அவரது உடல் பிரேதப் பரிசோதனைக்காக பினாங்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சம்பவம் தொடர்பாக திடீர் மரணம் குறித்த விசாரணை அறிக்கை பதிவு செய்யப்பட்டு, தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!