
3 மாநிலங்களில் அணைக்கட்டுகளில் நீர் மட்டம் குறைந்தது செயற்கை மழை பொழியவைக்க நடவடிக்கை
குவாலா நெருஸ் , பிப்ரவரி-10,
நீண்ட கால வெப்பம் மற்றும் மழைப்பொழிவு இல்லாததால், ஜோகூர், கெடா மற்றும் பேராக்கில் உள்ள பல முக்கிய அணைக்கட்டுகள் தற்போது எச்சரிக்கை நிலையில் உள்ளன. நீர் விநியோகம் போதுமானதாக இருப்பதையும் பாதிக்கப்படாமல் இருப்பதையும் உறுதி செய்வதற்காக மேக விதைப்பு நடவடிக்கைகளை செயல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
நாளை பிப்ரவரி 11ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 15ஆம்தேதிவரை மேக விதைப்பு நடவடிக்கை கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் எனதுணைப் பிரதமரும் Nadma எனப்படும் தேசிய பேரிடர் அமைப்பின் (NADMA) தலைவருமான டத்தோஸ்ரீ அகமட் ஸாஹிட் ஹமிடி தெரிவித்தார்.
ஜோகூருக்கான மேக விதைப்பு நடவடிகைகை பிப்ரவரி 11 மற்றும்
12 ஆம் தேதிகளில் Upper லயாங் அணைக்கட்டு , பூலாய் முதலாவது அணைக்கட்டு மற்றும் மாச்சாப் அணைக்கட்டு ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கும் . தொடர்ந்து பிப்ரவரி 13 ஆம்தேதி மற்றும் பிப்ரவரி 14ஆம் தேதி கெடா, மற்றும் பேராவிலுள்ள முக்கிய அணைக்கட்டுப் பகுதிகளில் நீர் சேகரிப்புப் பகுதியில் மழைப்பொழிவை அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்நாட்டு, விவசாய மற்றும் தொழில்துறை பயனர்களுக்கு விநியோக இடையூறுகளைத் தவிர்க்க உடனடி நடவடிக்கையாக மேக விதைப்பு நடவடிக்கை எடுக்கப்படவிருப்பதாக இன்று கோலா நெருஸில் செய்தியாளர்களிடம் பேசியபோது அகமட் ஸாஹிட் தெரிவித்தார்.



