
கோலாலாம்பூர், மார்ச்-5-உள்நாட்டு வருவாய் வாரியமான LHDN, தனது 30-ஆம் ஆண்டு நிறைவை ரமலான் மாதத்துடன் இணைத்து, ஊடகங்களுக்கான இஃப்தார் நோன்புத் திறப்பு நிகழ்ச்சியாக நேற்றிரவு கோலாலம்பூரில் நடத்தியது.
இதில், பத்திரிகைக், தொலைக்காட்சி, வானொலி, மின்னியல் மற்றும் படைப்பாற்றல் துறைகளிலிருந்து 120-க்கும் மேற்பட்ட ஊடக அன்பரகள் கலந்துகொண்டனர்.
விழாவில் உரையாற்றிய LHDN தலைமை செயலதிகாரி டத்தோ Dr Abu Tariq Jamaluddin, ஊடகங்கள் இந்த 30 ஆண்டுகளாக வரி தொடர்பான விழிப்புணர்வை உயர்த்தவும், மக்களின் நம்பிக்கையை வலுப்படுத்தவும் முக்கிய பங்கு வகித்து வருவதாக புகழாரம் சூட்டினார்.
”ஊடகங்கள் அரசாங்கத்தின் வரி கொள்கைகள் மற்றும் செய்திகளை எளிதாகவும், சமநிலையுடனும் மக்களிடம் கொண்டு சேர்க்கும் பாலமாக உள்ளன” என்றார் அவர்.
இந்த நோன்புத் துறப்பு நிகழ்வு, ரமலான் மாதத்தின் புனிதத்துடன், LHDN மற்றும் ஊடகங்களுக்கிடையேயான உறவை மேலும் வலுப்படுத்தியது.



