Latestமலேசியா

4 வரிசை வீடுகளில் மேல் தளங்கள் தீயில் அழிந்தன

கங்கார், மார்ச் 25 – கங்காரில் தாமான் கெமாஜூவானில் நான்கு வரிசை வீடுகளின் மேல் தளங்கள் நேற்று இரவு ஏற்பட்ட தீவிபத்தில் முற்றிலுமாக அழிந்தன.

இது தொடர்பான அவசர அழைப்பை இரவு மணி 10.31 அளவில் பெற்றததாக பெர்லீஸ் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையின் நடவடிக்கை பிரிவின் அதிகாரி சப்ரி ரொம்லி தெரிவித்தார்.

சம்பவம் நடந்த இடத்தில் நான்கு வரிசை வீடுகளில் எரிந்த தீ விரைந்து மேல் மாடிகளுக்கு விரைவாக பரவியதாக கூறப்பட்டது,

குவாலா பெர்லிஸ், (Kuala Perlis), கோடியாங் ( Kodiang) மற்றும் பாவ் (Pauh) ஆகிய இடங்களைச் சேர்ந்த தன்னார்வ தீயணைப்புத் துறையின் 26 உறுப்பினர்கள், நான்கு தீயணைப்பு வாகனங்களுடன் தீயை அணைக்கும் பணியில் உதவினர்.

இரவு மணி 10.51 க்கு தீ முழுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. இந்த தீவிபத்தில் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை.

இந்த தீ விபத்திற்கு காரணம் மற்றும் இழப்பை கண்டறிவதற்கு விசாரணை நடத்தப்பட்ட வருகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!