
கோலாலம்பூர், அக் 28 – கோலாலம்பூர், பண்டார் பாரு ஸ்ரீ பெட்டாலிங்கில்
உள்ள அடுக்ககத்தில் 4.2 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள 145 கிலோ ஹெரொய்ன் மற்றும் ஷாபு போதைப் பொருளை பறிமுதல் செய்த போலீசார் இரு நபர்களை கைது செய்தனர். கோலாலம்பூர் போலீஸ் போதைப் பொருள் துடைத்தொழிப்பு பிரிவைச் சேர்ந்த குழுவினர் கடந்த புதன்கிழமையன்று மேற்கொண்ட நடவடிக்கையில் அந்த அடுக்ககத்தின் லிப்டிற்கு முன்புறம் 25 மற்றும் 21 வயதுடைய இரண்டு சந்தேகப் பேர்வழிகளை கைது செய்தனர். மாலை மணி 3. 30 மணியளவில் அந்த இருவர் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவர்கள் இருவரையும் அடுக்ககத்திற்கு உள்ளே அழைத்துச் சென்ற பின்னர் அங்குள்ள ஒரு வீட்டிலிருந்து போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாக புக்கிட் அமான் போதைப் பொருள் துடைத்தொழிப்புத் துறையின் இயக்குனர்
காவ் கோக் சின் ( Khaw Kok Chin ) தெரிவித்தார்.
மாதந்தோறும் 1,500 ரிங்கிட் வாடகைக்கு எடுக்கப்பட்ட அந்த அடுக்ககம் போதைப் பொருளை வைப்பதற்கான கிடங்காக பயன்படுத்தப்பட்டதாக நப்பப்பபடுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருளின் மொத்த சந்தை சந்தை மதிப்பு 4 .18 மில்லியன் ரிங்கிட் என இன்று கோலாலம்பூர் போலிஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் காவ் கூறினர். அந்த கிடங்கின் பராமரிப்பாளராக செயல்பட்ட 25 வயது ஆடவனுக்கு ஒரு மாதத்திற்கு 5,000 ரிங்கிட் சம்பளம் வழங்கப்பட்டதோடு அவனது உதவியாளனுக்கு தினசரி செலவுக்கு பணம் வழங்கப்பட்டு வந்ததோடு கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் அக்கும்பல் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையின் மூலம் தெரியவந்துள்ளது.