
ஜார்ஜ் டவுன், நவ 13 – பினாங்கு இந்து அறப்பணி வாரியம்
பி. 40 எனப்படும் வசதிக் குறைந்த குடும்பங்களைச் சேர்ந்த அரசு மற்றும் தனியார் உயர்க்கல்விக் கழகங்களில் பயிலும் 40 மாணவர்களுக்கு மொத்தம் 37,400 ரிங்கிட் கல்வி உதவி நிதியை வழங்கியது.
அரசாங்க மற்றும் தனியார் உயர்க்கல்வி நிலையங்களில் பயிலும் மாணவர்களுக்கு தொடர்ந்து உதவி வழங்கும் கடப்பாட்டைக் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் கொண்டிருப்பதாக அந்த வாரியத்தின் தலைவரான RSN ராயர் உறுதியளித்தார். உயர்க்கல்வி மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் நிகழ்ச்சில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இத்தகவலை வெளியிட்டார்.
இந்த நிகழ்ச்சியில் பினாங்கு இந்து அறப்பணி வாரியத்தின் துணைத் தலைவர் செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் ஆர். அருணாசலம், நிதித்துறை துணையமைச்சர் லிம் ஹுய் யிங் ( Lim Hui Ying ) உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
பினாங்கு முழுவதும் உள்ள இந்து மாணவர்களுக்கு உதவுவதற்காக 2023 ஆம் ஆண்டு முதல் பினாங்கு இந்து அறப்பணி வாரியம் 1 மில்லியன் ரிங்கிட்டிற்கும் அதிகமான நிதி ஒதுக்கியது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என்பதோடு , இது நாட்டிலுள்ள பிற சமய இயங்கங்கள் எடுத்துக்காட்டாக பின்பற்றப்பட வேண்டிய சாதனையாககும் என Lim Hui Ying தமதுரையில் தெரிவித்தார்.
இதற்கிடையில், குடும்பப் பின்னணியைப் பொருட்படுத்தாமல் அதிகமான மாணவர்கள் நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்வதற்காக கல்வி உதவித் திட்டம் அவ்வப்போது தொடரப்படும் என்று செனட்டர் டாக்டர் லிங்கேஸ்வரன் வலியுறுத்தினார்.
வறுமையிலிருந்து விடுபடுவதற்கான முக்கிய திறவுகோல் கல்வியாக
இருப்பதால் , நிதி நெருக்கடி காரணமாக எந்த மாணவரும் பள்ளியை விட்டு வெளியேறாமல் இருப்பதை உறுதி செய்ய விரும்புகிறோம். வழங்கப்படும் ஒவ்வொரு உதவியும் சமூக பங்களிப்புகள் மற்றும் இளம் இந்து தலைமுறையின் எதிர்காலத்தை வலுப்படுத்த மாநில அரசின் ஆதரவின் விளைவாகும் என்று அவர் விளக்கினார்.



