
ஜோர்ஜ் டவுன் , மார்ச் 3-இவ்வாண்டு ஜூன் மாதம் 16 ஆம் தேதி முதல் 22 ஆம்தேதிவரை இரண்டாவது வருடாந்திர திட்டமிடப்பட்ட பராமரிப்புக்காக பினாங்கு கொடி மலை ரயில் சேவை மூடப்படும்.
பினாங்கு Bukit Bendera கொடி மலை ரயில் நிறுவனம் இன்று வெளியிட்ட அறிக்கையின்படி, ஜூன் 23ஆம் தேதியன்று ரயில் சேவை மீண்டும் இயக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
ரயில் சேவை எப்போதும் சிறந்த நிலையில் இருப்பதை உறுதி செய்வதற்காக, ஃபுனிகுலர் ( Funikular ) உற்பத்தியாளரின் சுவிட்சர்லாந்தின் (Switzerland) பொறியாளர்களின் மேற்பார்வையின் கீழ் ஒவ்வொரு ஆண்டும் திட்டமிடப்பட்ட இரண்டு பராமரிப்புகளை மேற்கொள்கிறது.
இரண்டாவது வருடாந்திர திட்டமிடப்பட்ட பராமரிப்பில் Mutiara பெட்டிகளை மாற்றுவதும், மின் மற்றும் மின்னணு அமைப்புகளை ஆய்வு செய்வதும் அடங்கும்.
தினசரி, வாராந்திர மற்றும் மாதாந்திர அடிப்படையில் அவ்வப்போது ஆய்வுகள் மற்றும் பராமரிப்பு மேற்கொள்ளப்படுகிறது.
அத்துடன் இயக்க நேரத்திற்குப் பிறகு தினசரி வழக்கமான சோதனைகளையும் மேற்கொள்கிறது.
பராமரிப்பு காலத்தில், பார்வையாளர்கள் பினாங்கு புக்கிட் Bendera கொடி மலை ஜீப் சேவை ஓட்டுநர்கள் சங்கத்தால் நிர்வகிக்கப்படும் ஜீப் சேவையைப் பயன்படுத்தலாம்.
மேலும் பினாங்கு கொடி மலையின் உச்சியை அடைய ஹைகிங் (hiking) பாதையைப் பயன்படுத்தலாம் என்று பினாங்கு Bukit Bendera கொடி மலை ரயில் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.