Latestமலேசியா

42,000 மேற்பட்ட VEP வாகன நுழைவு பெர்மிட் அட்டை இன்னும் புதுப்பிக்கவில்லை ஜே.பி. ஜே தகவல்

ஜோகூர் பாரு, ஜூலை 1 – இன்று முதல் மலேசியாவிற்குள் நுழைவும் வெளிநாட்டு வாகனங்களுக்கான VEP எனப்படும் வாகன நுழைவு பெர்மிட் முழுமையாக அமலுக்கு வந்தபோதிலும் சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட தனிப்பட்டோரின் தனி வாகன உரிமையாளர்களுக்கான தங்களது VEP பெர்மிட் அட்டையை 42,416 பேர் அல்லது 17.07 விழுக்காட்டினர் ஜூன் 29ஆம் தேதிவரை இன்னும் புதுப்பிக்காமல் உள்ளனர்.

தனிநபர்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு மொத்தம் 248,504 VEP Radio Frequency அடையாள அட்டைகளான ( RFID ) விநியோகிக்கப்பட்டுள்ளன. இதுதவிர நிறுவனங்களுக்கு சொந்தமான வாகனங்களுக்கு 3,765 அடையாள அட்டைகள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக சாலை போக்குவரத்துத்துறையின் தலைமை இயக்குனர் Aedy Fadly Ramly தெரிவித்தார்.

இவற்றில் 206,088 அல்லது 82,93 விழுக்காடு அட்டைகள் தனிப்பட்டவர்களுக்கான வாகன அட்டைகள் புதுப்பிக்கப்பட்டுள்ள வேளையில் தனியார் நிறுவனங்களின் வாகனங்களுக்கான VEP அட்டைகள் முழுமையாக புதுப்பிக்கப்பட்டுள்ளன .

ஜூன் 29ஆம் தேதிவரை நிறுவனங்களின் தனிப்பட்ட வாகனங்களுக்கு முன்கூட்டியே 19,690 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இன்று அதிகாலையில் Sultan Iskandar கட்டிடத்தில் நாட்டிற்குள் நுழைவும் வாகன நுழைவு பெரிமிட் அமலாக்கம் தொடர்பான சிறப்பு நடவடிக்கையை தொடக்கிவைத்த பின் செய்தியாளர்களிடம் பேசியபோது Aedy Fadly Ramli இத்தகவலை வெளியிட்டார்.

மலேசியாவிற்குள் நுழையும்போது VEP- அட்டையை பதிவு செய்யாத அல்லது செயல்படுத்தாத சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட வாகனங்களைச் சோதனை செய்வதன் மூலம், இன்று அதிகாலை 12.01 மணிக்கு முழு அமலாக்கம் தொடங்கியது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!