Latestமலேசியா

RM30,000 ரிங்கிட் நிதியுதவிக்கு 17 இந்தியக் கூட்டுறவுக் கழகங்கள் மட்டும் விண்ணப்பம் – ரமணன் ஏமாற்றம்

கோலாலம்பூர், பிப்ரவரி-13 – நாட்டிலுள்ள இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு SKM எனப்படும் மலேசியக் கூட்டுறவு ஆணையம் வழங்கும் நிதியுதவிக்கு வெறும் 17 கூட்டுறவுக் கழகங்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளன.

நாட்டின் வரலாற்றில் முதன் முறையாக கடந்தாண்டு இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கான மாநாட்டில் பங்கேற்ற அனைத்துக் கூட்டுறவுக் கழகங்களும், 30,000 ரிங்கிட் மானியத்திற்கு விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.

அதில் பங்கேற்ற சுமார் 200 கழங்கங்கள் அந்நிதிக்கு விண்ணப்பிக்கத் தகுதிப் பெற்றும், வெறும் 17 கழகங்கள் மட்டுமே விண்ணப்பித்துள்ளது பெருத்த ஏமாற்றமாகும்.

இப்படி அலட்சியமாக இருந்தால் எப்படியென, தொழில்முனைவோர் – கூட்டுறவு மேம்பாட்டுத் துறை துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ ரமணன் குறைப்பட்டுக் கொண்டார்.

பெரும் பாடு பட்டு நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுத் தருகிறோம்; அதனைப் பயன்படுத்தா விட்டால் வரும் காலங்களில் எப்படி கூடுதல் நிதியைப் பெறுவது என ரமணன் கேட்டார்.

எனவே, இந்நிதி உதவி குறித்து இந்தியக் கூட்டுறவுக் கழகங்களுக்கு விழிப்புணர்வை நடத்த நாடளாவிய நிலையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

எப்படி விண்ணப்பம் செய்வது, தேவையான ஆவணங்கள் உள்ளிட்டவை குறித்து SKM விளக்கமளிப்புக் கூட்டங்களும் நடத்துமென, டத்தோ ஸ்ரீ ரமணன் சொன்னார்.

அந்த 30,000 ரிங்கிட் மானியம் மற்றும் சுழல் முதலீட்டு நிதியத்திற்கு (Tabung Modal Pusingan) விண்ணப்பம் செய்த கூட்டுறவுக் கழங்களுக்கு நிதியுதவிகளை ஒப்படைத்த நிகழ்வுக்குப் பிறகு துணை அமைச்சர் செய்தியாளர்களிடம் பேசினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!