Latestஉலகம்சிங்கப்பூர்

தண்ணீர் குடித்த குழந்தைகளுக்கு 2 டாலர் அபராதம்? சிங்கப்பூர் உணவகத்தின் விசித்திர விதிமுறை

சிங்கப்பூர், ஏப்ரல்-15,சிங்கப்பூர் கேலாங்கில் (Geylang) உள்ள ஓர் உணவகத்தில், வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குழந்தைகள் குடித்ததற்காக 2 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி மாதம் அந்த உணவகத்திற்கு 5 பேர் கொண்ட குடும்பத்துடன் சென்ற நிலையில், தனது 5 மற்றும் 10 வயதுடைய குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த பாட்டில்களிலிருந்த தண்ணீர் குடித்ததாக Ng என்ற ஆடவர் தெரிவித்தார்.

ஆனால், உணவகத்தின் இரசீதில் ‘வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட பானங்கள்’ (Outside Drinks) என்ற பெயரில் இரண்டு கட்டணங்கள் சேர்க்கப்பட்டிருந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது.

இது குறித்து கருத்துரைத்த Ng, “நாங்கள் ஏற்கனவே மதுபானங்கள் ஆர்டர் செய்திருந்தோம். ஆனால், சிறு குழந்தைகள் தண்ணீர் குடித்ததற்காகக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது” என்றார்.

அதை விட வேதனை என்னவென்றால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உணவகத்திற்குத், வாடிக்கையாளராக வந்துபோகும் தமக்கே இந்த நிலையா என அவர் கேட்டார்.

ஆனால், உணவக நிர்வாகமோ, வெளியிலிருந்து உணவு மற்றும் பானங்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுழைவாயிலிலேயே விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெளிவுப்படுத்தியது.

மேலும், வணிக ரீதியாகத் தங்களின் கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம் என நிர்வாகம் சுட்டிக் காட்டியது.

இருப்பினும், ஊழியர்கள் தங்களுக்கு இது குறித்து முன்னரே எச்சரிக்கவில்லை எனத் Ng திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்கு மீண்டும் செல்லப் போவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார்.

சிங்கப்பூர் கேலாங்கில் (Geylang) உள்ள ஓர் உணவகத்தில், வீட்டிலிருந்து கொண்டு வந்த தண்ணீரைக் குழந்தைகள் குடித்ததற்காக 2 டாலர் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்ட சம்பவம் சமூக வலைத் தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

பிப்ரவரி மாதம் அந்த உணவகத்திற்கு 5 பேர் கொண்ட குடும்பத்துடன் சென்ற நிலையில், தனது 5 மற்றும் 10 வயதுடைய குழந்தைகள் தாங்கள் கொண்டு வந்த பாட்டில்களிலிருந்த தண்ணீர் குடித்ததாக Ng என்ற ஆடவர் தெரிவித்தார்.

ஆனால், உணவகத்தின் இரசீதில் ‘வெளியிலிருந்து கொண்டு வரப்பட்ட பானங்கள்’ (Outside Drinks) என்ற பெயரில் இரண்டு கட்டணங்கள் சேர்க்கப்பட்டிருந்தது அவருக்கு அதிர்ச்சியை அளித்தது.

இது குறித்து கருத்துரைத்த Ng, “நாங்கள் ஏற்கனவே மதுபானங்கள் ஆர்டர் செய்திருந்தோம். ஆனால், சிறு குழந்தைகள் தண்ணீர் குடித்ததற்காகக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது” என்றார்.

அதை விட வேதனை என்னவென்றால், 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த உணவகத்திற்குத், வாடிக்கையாளராக வந்துபோகும் தமக்கே இந்த நிலையா என அவர் கேட்டார்.

ஆனால், உணவக நிர்வாகமோ, வெளியிலிருந்து உணவு மற்றும் பானங்கள் கொண்டு வரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக நுழைவாயிலிலேயே விளம்பரம் செய்யப்பட்டுள்ளதாகத் தெளிவுப்படுத்தியது.

மேலும், வணிக ரீதியாகத் தங்களின் கொள்கைகளைப் பின்பற்றுவது அவசியம் என நிர்வாகம் சுட்டிக் காட்டியது.

இருப்பினும், ஊழியர்கள் தங்களுக்கு இது குறித்து முன்னரே எச்சரிக்கவில்லை எனத் Ng திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அந்த உணவகத்திற்கு மீண்டும் செல்லப் போவதில்லை என அவர் முடிவு செய்துள்ளார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!