Latestமலேசியா

6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவம்; உடலை அடக்கம் செய்ய ஆள் நடமாட்டமில்லாத இடத்தைத் தேர்வு செய்த தந்தை

சிரம்பான், ஆகஸ்ட் 4 – நாட்டை உலுக்கிய 6 வயது சிறுவன் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட சம்பவம் தொடர்பில், ஆள் நடமாட்டமில்லாத அமைதியான பகுதியாக ஜெம்போல் அருகிலுள்ள ரோம்பின் பகுதி இருந்ததால் அந்த இடத்தை தேர்ந்தெடுத்து மகனின் உடலை புதைத்திருப்பது மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.

தனக்கு மிகவும் பரிச்சயமான சம்பந்தப்பட்ட இடத்திற்கு அச்சிறுவனை அழைத்துச் சென்று கழுத்தை நெரித்து கொன்று, பின்னர் அங்கேயே உடலை புதைத்துள்ளான் சந்தேக ஆடவன்.

குடும்ப தகறாறு காரணமாக கூறினாலும் இக்கொலைக்கான உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணை தொடர்வதாக நெகிரி செம்பிலான் காவல்துறைத் தலைவர் டத்தோ அகமது ஜாஃபிர் முகமது யூசோஃப் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த ஆடவன் 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், தேவை ஏற்பட்டால் தடுப்பு காவல் நீட்டிக்கப்படும் என்றும் போலீஸ் தரப்பு கூறியுள்ளது.

சிறுவனின் பிரேத பரிசோதனையின் முடிவில், பாதிக்கப்பட்டவர் கேபிள் இறுக்கியைக் பயன்படுத்தி கழுத்தை நெரித்து கொன்றதாக கண்டறியப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!