
பெட்டாலிங் ஜெயா, ஜூலை 18 – கடந்த ஞாயிறு மற்றும் புதன்கிழமைகளில், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) 1 இல், போலி விசாக்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைய முயன்ற ஆப்கானிஸ்தான் நாட்டைச் சார்ந்த ஏழு பேரை, எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நிறுவனம் (AKPS) கண்டறிந்து கைது செய்துள்ளது.
ஐந்து பெரியவர்கள் மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளடங்கிய அந்த இரண்டு குழுக்களும், உஸ்பெகிஸ்தானிலிருந்து தயாரிக்கப்பட்ட போலி விசாக்களைப் பயன்படுத்தி இங்கு வந்திருக்கின்றனர் என்று அறியப்படுகின்றது.
மலேசியாவிற்கு வருவதற்கு முன்னதாக அவர்கள் அனைவரும் ஈரானிலிருந்து தப்பி வந்துள்ளனர் என்று விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
சட்டவிரோத இடம்பெயர்வுக்கான எந்தவொரு முயற்சிகளையும் நாட்டின் எல்லை கட்டுப்பாடு நிறுவனம் ஒருபோதும் ஆதரிக்காது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.