
ஜோகூர் பாரு, பிப் 14 – போலீசார் கடந்த வாரம் மேற்கொண்ட பல்வேறு சோதனை நடவடிக்கையில் 3.1 மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய போதைப் பொருளை பறிமுதல் செய்ததோடு சிங்கப்பூரியர் ஒருவர் உட்பட மூவரை கைது செய்தனர்.
பிப்ரவரி 6 ஆம் தேதி நள்ளிரவுக்கும் மறுநாள் அதிகாலை 1.30 மணிக்குமிடையே மேற்கொள்ளப்பட்ட ஏழு சோதனை நடவடிக்கையின்போது 41 மற்றும் 48 வயதுடைய அந்த சந்தேகப் பேர்வழிகள் கைது செய்யப்பட்டதாக ஜோகூர் போலீஸ் தலைவர் டத்தோ M .குமார் தெரிவித்தார்.
Dangga Bay , Taman Setia Indah, Taman Pelangi indah மற்றும் Tamboi யில் ஆடம்பர அடுக்ககம் மற்றும் வரிசை வீடுகளில் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
அந்த மூன்று சந்தேகப் பேர்வழிகளிளும் சம்பந்தப்பட்ட வீடுகளில் வாடகைக்கு தங்கியிருந்ததோடு போதைப் பொருள் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்த கும்பல் போதைப் பொருட்களை instant coffee மற்றும் கோகோ (cocoa) பாக்கெட்டுகளில் மீண்டும் பேக்கேஜ் செய்து, ஒவ்வொன்றும் 200 ரிங்கிட் முதல் 250 ரிங்கிட்வரை விற்பனை செய்து வந்ததாக குமார் தெரிவித்தார்.
இந்த குற்றவாளிகள் உள்நாட்டில் போதைப்பொருட்களை விநியோகிப்பதற்கு முன், பாதுகாப்பு வசதியைக் கொண்ட உயர்தர ஆடம்பர அடுக்குமாடியில் போதைப் பொருட்களை சேமித்து வைப்பது மற்றும் மறு பேக்கேஜிங் (packaging) வசதிகளாக பயன்படுத்தியுள்ளனர் என இன்று ஜோகூர் போலீஸ் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் குமார் கூறினார்.
அவர்களிடமிருந்து 15.3 கிலோ ecstasy தூள், கெத்தமின் (ketamine) , ஷாபு (syabu), கெனபிஸ்(cannabis), போதை மாத்திரைகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.