Latestமலேசியா

8 மாதங்களில் இல்லாத அளவுக்குச் சரிந்த தங்க விலை; ஒரு கிராம் RM466.37

கோலாலம்பூர், நவம்பர்-21,உலகச் சந்தையில் தங்கத்தின் விலை, கடந்த 8 மாதங்களில் இல்லாத அளவுக்குக் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

அதாவது ஒரு கிராம் தங்கத்தின் விலை 466 ரிங்கிட் 37 சென்னாகச் சரிந்துள்ளது.

அமெரிக்க டாலரின் வலுவான நிலை மற்றும் அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகிதக் கொள்கை தொடர்பான எதிர்பார்ப்புகள், தங்கத்தின் விலை வீழ்ச்சிக்குக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

உலகளாவிய பொருளாதாரச் சூழல் மற்றும் முதலீட்டாளர்களின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும் தங்க விலையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.

தங்கத்தின் விலை சரிந்திருப்பது, நகைகள் வாங்கத் திட்டமிட்டுள்ள பொது மக்களிடையே ஒருவகையில் ஆர்வத்தை ஏற்படுத்தக்கூடும்.

இருப்பினும், உலகச் சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களைச் சந்திக்கக்கூடும் என்பதால், முதலீட்டாளர்கள் சந்தை நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!