
எட்டு வயது முதல் 12 வயதுடைய 9 மாணவர்களை ஓரின புணர்ச்சி செய்ததாக ஆசிரியர் ஒருவர் மீது
கோத்தா பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் 11 குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது.
கடந்த 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து ஜூலை மாதம்வரை 52 வயதுடைய ஆசிரியர் இக்குற்றங்களை புரிந்ததாக குற்றஞ்சாட்டப்பட்டார்.
Bachokகிற்கு அருகே Kampung Beris, Panchor, Tawang ஆகிய இடங்களிலும் , ஒரு பள்ளியின் கணினி அறை மற்றும் விளையாட்டு நிர்வாக அறையிலும் அந்த ஆசிரியர் இக்குற்றத்தில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.
20 ஆண்டுகள் வரை சிறை மற்றும் பிரம்படிகள் விதிக்கப்படும் 2017 ஆம் ஆண்டின் சிறார் பாலியல் குற்றங்கள் சட்டத்தின் 14(a) விதியின் கீழ் இந்த குற்றச்சாட்டுக்கள் கொண்டு வரப்பட்டது.
மேலும் பள்ளியின் கூட்டுறவு கடையிலும் 9 மற்றும் 11 வயது சிறார்களிடம் இதே குற்றத்தில் ஈடுபட்டதாகவும் அந்த ஆசிரியர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது.
நீதிபதி Tengku Shahrizan Tuan Lah முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுக்களையும் அந்த ஆசிரியர் மறுத்தார். அனைத்து குற்றச்சாட்டுக்களுக்கும் 55,000 ரிங்கிட் ஜாமின் தொகை அனுமதிக்கப்பட்டது.
மேலும் அவரது கடப்பிதழை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்பதோடு , பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அரசு தரப்பின் சாட்சியங்களுக்கு தொந்தரவு கொடுக்கக்கூடாது என்றும் குற்றஞ்சாட்டப்பட்ட நபருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதோடு மாதத்திற்கு ஒரு நாள் அருகேயுள்ள போலீஸ் நிலையத்தில் ஆஜராகும்படியும் நீதிமன்றம் உத்தரவிட்டது.



