கோலாலம்பூர், செப்டம்பர் 13 – எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் 19ஆம் திகதி வரை தீபகற்ப மலேசியாவில் உள்ள நான்கு மாநிலங்களில் கனமழை பெய்யும் என மலேசிய வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டிருக்கிறது.
அவை பெர்லிஸ், கெடா, பினாங்கு மற்றும் பேராக் மாநிலங்களாகும்.
குறிப்பாக, உலு பேராக் மாநிலத்தின் கிரியான், லாருட், மாத்தாங் மற்றும் செலாமா ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆறு மணி நேரங்களுக்கும் மேலாக இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.