கோலாலம்பூர், செப்டம்பர் 13 – 13 வயது மாணவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் மீது இன்று செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது.
பாதிக்கப்பட்ட மாணவரின் முன்னாள் ஆரம்பப் பள்ளி ஆசிரியரான அவர், ஜின்ஜாங் உதாராவில் உள்ள ஒரு வீட்டில், இந்த குற்றத்தைச் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டார்.
குற்றம் சாட்டப்பட்டவர் குடும்பத்திற்கு ஆதரவு வழங்க வேண்டும் என்ற சூழலில், நிதீமன்றம் 20,000 ரிங்கிட் ஜாமின் வழங்கி, கூடுதல் நிபந்தனைகளுடன் விடுக்க அனுமதி வழங்கியது.
அதே நீதிமன்றத்தில் மற்றொரு வழக்கில், மக்கள் வீட்டுத் திட்டமான PPR குடியிருப்பின் மேலாண்மை அமைப்பின் செயலாளர், 11 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது.
இந்த குற்றவாளிக்கும் கூடுதல் நிபந்தனைகளுடன் 15,000 ரிங்கிட் ஜாமின் வழங்க நீதிமன்றம் இசைவு வழங்கியது.
இந்த இரண்டு வழக்குகளும் எதிர்வரும் நவம்பர் 21ஆம் திகதி மறுசெவிமடுப்புக்கு ஒத்திவைக்கப்பட்டது.