![](https://vanakkammalaysia.com.my/wp-content/uploads/2024/09/MixCollage-18-Sep-2024-12-12-PM-2011.jpg)
புத்ராஜெயா, செப்டம்பர்-18, பெண்ணொருவருக்கு எதிராக மிரட்டல் விடுத்ததாக குளோபல் இக்வான் நிறுவனத்தைச் சேர்ந்த ஆடவர் இன்று புத்ராஜெயா மேஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.
அந்நிறுவனத்திற்கு எதிராக செய்த போலீஸ் புகாரை மீட்டுக் கொள்ளுமாறு அப்பெண்ணை மிரட்டியதாக, 39 வயது Riza Makar குற்றம் சாட்டப்பட்டார்.
புத்ராஜெய, Presint 4-கில் உள்ள Galeria விற்பனை வளாகத்தில் உள்ள கார் நிறுத்துமிடத்தில் வைத்து, 25 வயது இளம் பெண்ணை மிரட்டியதாகக் குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டது.
எனினும் தம் மீதான அக்குற்றசாட்டை அவர் மறுத்து விசாரணைக் கோரினார்.
குற்றவியல் சட்டத்தின் 506-வது பிரிவின் கீழ் கொண்டு வரப்பட்ட அக்குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அதிகபட்சமாக ஈராண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படலாம்.
சந்தேக நபரை பத்தாயிரம் ரிங்கிட் மற்றும் ஒரு நபர் உத்தரவாதத்தின் பேரில் நீதிபதி ஜாமீனில் விடுவித்தார்.
வழக்கு அக்டோபர் 18-ஆம் தேதி மறுசெவிமெடுப்புக்கு வருகிறது.