மக்கோத்தா இடைத்தேர்தலில் தேசிய முன்னணி வேட்பாளருக்குவாக்களிப்பது ஒட்டுமொத்த ஜோகூர் இந்தியர்களுக்கே பெரும் நன்மை பயக்கும் என கூறியுள்ளார் ம.இ.கா கட்சியின் தேசியத் தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன்.
பொது நிகழ்ச்சிகளுக்கு கூடுதல் மண்டபம், ஈமச்சடங்கு காரயங்களை செய்ய மின்சுடலை, வணிக வாய்ப்பு என இங்கு வாழும் மக்களின் பிரச்சனைகளை தீர்க்க சிறப்பு வியூகம் ஒன்றை வைத்திருப்பதாக அவர் கூறினார்.
“நாங்கள் ஒன்றும் சுயநலக் கட்சி அல்ல; பொதுநலத்துடன் சேவை செய்வதால்தான் கட்சி பாகுபாடின்றி அனைவரிக்கும் அனைத்து இடங்களிலும் நாங்கள் முன்னின்று உதவ முடியுவதாக அவர் குறிப்பிட்டார்.
தேசிய முன்னணி வேட்பாளரான Syed Husseinனுக்கு மக்கோத்தா வட்டாரத்தில் குறிப்பாக இந்திய வாக்காளர்கள் மத்தியில் நல்ல நற்பெயர் உண்டு. இதுவே அவர் வாக்காளர்களின் நம்பிக்கையைப் பெற்று வெற்றிப்பெறுவார் என பாரிசான் நேஷனல் கூட்டணி நம்புவதாக விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
இதனிடையே, தேசிய முன்னணி வேட்பாளரை வணக்கம் மலேசியா நேற்றைய இந்திய மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் சந்தித்தபோது தனக்கு இந்திய மக்களின் வரவேற்பு அமோகமாக இருப்பதாக Syed Hussein பகிர்ந்துக் கொண்டார்.
இன்னும் 2 தினங்களில் மக்கோத்தா இடைத்தேர்தல் நடைப்பெறவுள்ள நிலையில், பொதுமக்கள் தங்கள் நலம் பேணும் பிரதிநிதியை தேர்ந்தெடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டனர்.