
கோலாலம்பூர், அக்டோபர் 10 – மலாயா தொடருந்து நிறுவனமான KTMB, தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, கோலாலம்பூர் சென்ட்ரலிலிருந்து பாடாங் பெசார் (Padang Besar) வரை கூடுதல் இரண்டு மின்சார ரயில் சேவையான ETS பயணங்களை வழங்குகிறது.
அக்டோபர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 3ஆம் திகதி வரை 5 நாட்களுக்கு வழங்கப்படவுள்ள இச்சேவைக்கு, தினமும் 630 டிக்கெட்டுகள் கிடைக்கும் என்று KTMB தெரிவித்திருக்கிறது.
இந்த கூடுதல் ETS ரயில் சேவை பாடாங் பெசாரிலிருந்து KL சென்ட்ரலுக்கும், KL சென்ட்ரலிருந்து பாடாங் பெசாருக்கும், நிர்ணயக்கப்பட்ட இரண்டு நேரங்களில் மட்டுமே இயங்கும்.
மாலை 5 மணி மற்றும் காலை 11.05 மணி புறப்படும் நேரமாகும்; அதேவேளையில் இரவு 10.30 மற்றும் மாலை 4:30 மணிக்கு சென்றடையும் நேரம் என கூறப்பட்டுள்ளது.
இன்று காலை 10 மணி தொடங்கி விற்பனைக்கு வந்துள்ள டிக்கெட்டுகள், KTMB mobile செயலி மூலமாகவோ, அதிகாரப்பூர்வ KTMB இணையத்தளம் வாயிலாகவோ வாங்க பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், புறப்படும் நேரத்திற்கு ஐந்து நிமிடங்களுக்கு முன் வாயிற்கதவு மூடப்படும் என்பதால், பயணிகள் ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் வருமாறும் KTMB நினைவூட்டியுள்ளது.