Latestமலேசியா

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி நாயாக Kopi இருக்கட்டும்; சட்டத்தைத் திருத்த டத்தோ சிவகுமார் வலியுறுத்து

கோலாலம்பூர், அக்டோபர்-16,  Kopi என செல்லமாக அழைக்கப்பட்ட தெரு நாய் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு, திரங்கானு பெசூட் நகராண்மைக் கழகம் வழங்கிய விளக்கம் குறித்து, ம.இ.கா தேசியப் பொருளாளர் டத்தோ என்.சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

தெரு நாய்களால் மக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் எனக் கூறுவதை பொத்தாம் பொதுவாக ஏற்றுக்கொள்ள முடியாது.

அச்சுறுத்தல் கொடுத்த நாய்க்கு தான் செல்லமாக பெயர் வைத்து மக்கள் கொண்டாடினார்களா என, Persatuan Dinamik Sinar Kasih சங்கத்தின் தலைவரும், ஶ்ரீ மஹா மாரியம்மன் கோவில் தேவஸ்தான அறங்காவலருமான டத்தோ சிவகுமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

வாயில்லா ஜீவன்களைப் பிடித்து கொல்வதற்கு செலவிடும் நேரத்தையும் சக்தியையும், அவற்றை விட அதிக அச்சுறுத்தலைக் கொண்டு வரும் போதைப் பித்தர்கள், வழிப்பறிக் கொள்ளையர்கள், mat rempit போன்றவர்களை ‘வேட்டையாட’ பயன்படுத்தலாமே என அவர் கூறினார்.

சுட்டுக் கொல்லப்பட்ட கடைசி தெரு நாயாக இந்த Kopi இருக்கட்டும்; இனியும் இது போன்று நிகழக் கூடாது.

அதற்கு முதலில், ஆதரவின்றி சாலைகளில் சுற்றித் திரியும் பிராணிகள் தொடர்பான சட்டங்களில் அரசாங்கம் திருத்தம் செய்ய வேண்டும்.

பிராணிகளைச் சுட்டுக் கொல்வது மட்டுமே தீர்வல்ல; எத்தனையோ பேர் அவற்றைத் தத்தெடுக்க காத்திருக்கிறார்கள் என்பதை அரசாங்கம் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

நாட்டில் கட்டாய மரண தண்டனையே இரத்துச் செய்யப்பட்டு விட்டது.

அப்படியிருக்க பிராணிகளின் உயிரைப் பறிப்பது மட்டும் நியாயமா என டத்தோ சிவகுமார் கேள்வியெழுப்பினார்.

பொது மக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையிலேயே Kopi சுட்டுக் கொல்லப்பட்டதாக பெசூட் நகராண்மைக் கழகம் முன்னதாக அறிக்கை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!